இது உனக்காக. வெசிக்கோ. :)
----
மனதின் ஓரம்
ஈரம் கசிந்துகொண்டே இருக்கும் ஒரு மூலையில்
உன் நினைவுகள் இன்னும் தித்திக்கின்றன...
சன்னலின் ஓரம் அமர்ந்தவாறே
நீ என் தோள்மேல்
தலைசாய்த்த அழகை
எண்ணிப்பார்க்கின்றேன்...
குளிருக்கு இதமாக உனது நெருக்கம்.
விரல்தொட அஞ்சும் நெஞ்சம்
மனதிலோ
காவியம் வார்துக்கொண்டிருந்தது!
தூக்கத்தில்
எனது பெயரின் பாதியை
உன் உதடுகள் இசைக்க
நாடி ஒரு கணம் இழுத்து நின்றது
சிலிர்த்தெழுந்த இதயம்
சிறகடிக்கத்துவங்கவே
மழையின் சாரல்
முகத்தின்மீது சற்று விழுந்தது ...
இன்றும்
நீயே கனவுகளை சுற்றி வளைத்தாய் என
என் புன்னகை உறுதி செய்தது
.
என்றாவது உன்னிடம்
உண்மை கூற வேண்டுமென
மீண்டும் முடிவு செய்கின்றேன்,
என்னுள் உன்னை பூட்டியவாறே
.
----
(புகைப்படம்: deviantart)


6 comments:
I LOVED IT ! :D
LOVED IT !
Sivagnanavathy Ksk - my favourite writer !
NOT jus a writer, a poet too. :D
A picture is worth a thousand words. But not any 1000 words can make it worth a picture, but these that you have put together here, does make it worth a picture and much more!
i WANNA get COMMITED! :(
Sivaaaaaaaaaaaa,.,. Awesome macha.. kalakira!! \m/ >:D<
Awesome, Love you baby :)
Post a Comment